கொடுக்கலை… படுத்து தூங்க மெத்தை… ஏசி… பாக்., அரசு மீது குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்:
கொடுக்கலையே… கொடுக்கலையே… படுத்து தூங்க மெத்தை கொடுக்கலையே என்று மாஜி பிரதமர் மகன் குற்றம்சாட்டி உள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், படுத்து தூங்க மெத்தை வழங்கப்படவில்லை, ஏசி ரூம் இல்லை என்று அவரது மகன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் விவகாரம் தொடர்பாக, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக மூன்று ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஒன்றான, பிரிட்டன் தலைநகர் லண்டனில், அவன்பீல்டு பகுதியில், நான்கு சொகுசு வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் நவாசுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மகள் மரியமுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நவாஸ் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நவாசின் மகன் ஹூசைன் கூறுகையில், சிறையில் எனது தந்தை தூங்க மெத்தை வழங்கப்படவில்லை. கழிவறைகள் அசுத்தமாக உள்ளதாக என்னிடம் தகவல் கூறியுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளை மரியாதையுடன் நடத்தியதற்கு இங்கு முன்னுதாரணம் இல்லை. ஆனால், அடிப்படை வசதிகளை பறிப்பது தொந்தரவுக்கு சமம். இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்
சிறையில் உள்ள நவாசை அவரது ஆலோசகர்கள் நேரில் சந்தித்த பேச அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களும், நவாசுக்கு ஏசி மற்றும் மெத்தை வசதிகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!