கொடுத்தது போலிச்சான்றிதழ்தான்… மாணவர் தலைவரின் தில்லாலங்கடி

புதுடில்லி:
போலிச்சான்றிதழ்… போலி சான்றிதழ் கொடுத்துள்ளார் மாணவர் தலைவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

டில்லி பல்கலை.க்கு கடந்த செப்டம்பரில் மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஏபிவிபி சார்பில் போட்டியிட்டு வென்ற அங்கிவ் பசோயா கல்விச்சான்றினை விசாரணை நடத்த வேண்டும் என காங். மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர்.

விசாரணையில் அவர் தமிழகத்தில் 2013-2016 ஆண்டுகளி்ல் வேலூரில் தங்கி திருவள்ளுவர் பல்கலை.யில் படித்ததாக கூறி டில்லி பல்கலை.யில் முதுகலை எம்.ஏ., வகுப்பில் சேர்ந்துள்ளார். கல்வி சான்றினை சோதனை செய்ததில் திருவள்ளுவர் பல்கலை.யில் பெற்றதாக கூறப்பட்ட சான்றிதழ் போலியானது.

திருவள்ளூர் பல்கலை. தேர்வுகள் அலுவலகத்தின் பதிவுகள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ் உண்மையானதல்ல என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!