கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்… முதல்வர் கமல்நாத்

போபால்:
நிறைவேற்றி உள்ளார்… கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் ம.பி. முதல்வர் கமல்நாத்.

ம.பி. முதல்வராக பதவியேற்ற கமல்நாத், ரூ. 2 லட்சம் வரை விவசாய கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார். ம.பி. மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங். பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.

முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது, தாம் முதல்வராக பதவியேற்றவுடன் 10 நாட்களில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன் என உறுதியளித்திருந்தார்.

அதன்படி நேற்று பதவியேற்ற கமல்நாத், முதல்வராக தனது முதல் கையெழுத்தாக ரூ. 2 லட்சம் வரையிலான விவசாய கடனை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், தேர்தல் முன்னர் விவசாயிகளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!