“கொண்டு வரலாம்… கொண்டு வரலாம்… நொறுக்குத்தீனிகளை கொண்டு வரலாம்”

மும்பை:
அப்பாடா… என்று குடும்பத் தலைவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். எதற்காக தெரியுங்களா?

மஹாராஷ்டிராவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு வருபவர்கள் இனி வீட்டிலிருந்தே நொறுக்கு தீனிகளை கொண்டு வரலாம் என்று அம்மாநில அரசு சட்டத்தை அமல்படுத்தவுள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், சினிமா ஹால்களில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டீல் கூடகொண்டு செல்ல முடியாத நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தியேட்டர் வளாகத்திற்குள் விற்கப்படும் நொறுக்கு தீனிகளை தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். டிக்கெட் விலையைவிட நொறுக்குத்தீனி விலை அதிகம் வைத்து தியேட்டர் நிர்வாகிகள் விற்பனை செய்வதாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மஹாராஷ்டிரா அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, விலையை ஒழுங்குப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மஹாராஷ்டிரா அரசு சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

தற்போது மஹாராஷ்டிரா சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் இயற்றப்பட்டது.. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தியேட்டர்களின் புதிய முறை அமல்படுத்தபட உள்ளது. அதன்படி தியேட்டர் வரும் ரசிகர்கள் தங்களது வீட்டிலிருந்தே நொறுக்குத்தீனி, ஸ்நாக்ஸ் அயிட்டங்களை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!