கொரோனா தொடர்பில் தகவல்களை கொடுக்க மறுக்கும் சீனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை தகவல்களை சீன அரசு தரமறுப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ இதுபற்றி கூறுகையில்,

“எனது கவலை என்னவென்றால், சீன கம்யூனிச அரசு தவறான தகவலை அளித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் உலகிற்குத் தேவையான தகவல்களை தருவதற்கு இன்னும் மறுத்து வருகிறது. சரியான தகவல்கள் கிடைத்தால் தான் மேலும் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் அல்லது இது போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்,

ரஷ்யா மற்றும் ஈரான் மற்றும் சீனாவிலிருந்து தவறான தகவல் பிரசாரம் தொடர்கிறது யு.எஸ். இராணுவத்திலிருந்து வருவதாக பேசுகிறார்கள். இத்தாலியில் தொடங்கியிருக்கலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள், அவர்களின் நோக்கம் (சீன அரசு) எல்லாம் பொறுப்பில் இருந்து திசைதிருப்ப வேண்டும் என்பது தான்.

நடந்துகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பிரச்சனை உலகளாவிய நெருக்கடி, இன்று ஒவ்வொரு நாடும் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்வோம், இதனால் உலகளாவிய சமூகம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, தொற்று நோய் சமூகம் இதை முழுமையான வழியில் செய்யத் தொடங்க வேண்டும்” என்றார்

முன்பு சைனிஸ் வைரஸ், வுகான் வைரஸ் என்று சொன்னதால் சீன கடும் கோபம் அடைந்தததையடுத்து இப்போது பாம்பியோ அதை சீன வைரஸ் என்று சொல்வதை தவிர்த்தார். அதற்கு பதிலாக கொரோனா வைரஸ் குறித்து கூறுகையில் “குற்றச்சாட்டுகளுக்கு நேரம் வரும்,” என்று அவர் கூறினார், ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இப்போது உலகம் அறிந்து கொள்வது முக்கியம் என்று அவர் கூறினார்.

Sharing is caring!