கொலம்பியாவில் கொக்கெய்ன் உற்பத்தி வீதம் அதிகரித்துள்ளது

கொலம்பியாவில் கொக்கெய்ன் உற்பத்தி வீதம் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் கொக்கெய்ன் உற்பத்தி 1,71,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுவதுடன், தற்போது 31 வீதமாக அதிகரித்துள்ளதாக ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொலம்பியாவில் வருடமொன்றுக்கு 1,400 தொன் கொக்கெய்ன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் மட்டும் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் கொக்கெய்ன் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவலை வௌியிடுவதாகவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!