கொலை….அமெரிக்காவில் சீக்கியர் குத்திக்கொலை

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு தொடரும் சீக்கியருக்கு எதிரான வன்முறை பதற்றத்தை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சிறுபான்மையினர் மீதான இனவெறி மற்றும் கறுப்பினத்தவருக்கு எதிரான நிறவெறித தாக்குதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் டெர்லோக் சிங் என்ற சீக்கியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அங்கு எசெக்ஸ் நகரில் கிழக்கு ஆரஞ்ச் பார்க்டெலி என்ற இடத்தில் பெரிய தொழிலதிபர் ஆவார். இதனிடையே வியாழக்கிழமை இரவு அவர் குத்தி கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது வீட்டுக்கு டெர்லோக் சிங்கை காண சென்ற உறவினர் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு போலீஸில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து டெர்லோக் சிங் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலையை செய்தது யார், பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட டெர்லோக் சிங்குக்கு அங்கு முன்விரோதம் ஏற்படும் அளவில் எந்த விஷயமும் நடக்கவில்லை. அவர் அந்தப் பகுதியில் நல்ல மனிதர் என்று அளவிலே பெயர் பெற்றுள்ளார். அவர் அங்கு தனது மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவே விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 3 வாரத்தில் சீக்கிய சமூகத்தினர் மீது நடந்த மூன்றாவது தாக்குதல் இதுவாக்கும். இதனால் அமெரிக்காவில் வாழும் சீக்கியர் சமூகத்தினர் மத்தியில் இந்த கொலைச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!