கொலை செய்ய யார் உத்தரவிட்டது?

பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி கொலை பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பி.க்களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்பூலில் உள்ள சவுதி தூதரகத்தில் அக்டோபர் 02 ஆம் திகதி கஷோஜி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான “வலுவான” ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கசோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய யார் உத்தரவிட்டது? போன்ற கேள்விகளுக்கு சவுதி அரேபியா பதிலளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எர்துகான் வலியுறுத்தியுள்ளார்.

Sharing is caring!