கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு வந்த காவிரி நீர்… மக்கள் உற்சாகம்

கொள்ளிடம்:
வந்தது கடைமடை பகுதிக்கு காவிரி தண்ணீர் உற்சாகமாக ஆடிப் பெருக்கை கொண்டாடினர் மக்கள்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு முக்கிய பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் தெற்கு ராஜன் வாய்க்கால் சுமார் 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் உள்ள விளைநிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது.

மழை இன்மை, மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் குறைந்த அளவு தண்ணீர் கொள்ளிடம் கடைமடைப்பகுதிக்கு சென்றடையாமல் போனதாலும் தெற்கு ராஜன் வாய்க்காலின் கடையணை அமைந்துள்ள பில் படுகை கிராமத்திற்கு கடந்த 10 வருடங்களாக தண்ணீர் சென்று சேரவில்லை.

இந்நிலையில் அணைக்கரையிலிருந்து பாசனத்திற்கு தெற்கு ராஜன் வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆடி மாதத்திலேயே முதன் முதலாக இந்த ஆண்டு பில்படுகை கிராமத்தில் அணைகரையிலிருந்து கொள்ளிடம் அருகே 53வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொள்ளிடம் கடையைணயை நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தது.

இதை பொதுப்பணிதுறையின் சீர்காழி உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், கொள்ளிடம் உதவி பொறியாளர் விவேகானந்தன், தனி ஆய்வாளர் சீனிவாசன், பாசன உதவியாளர்கள் மகாதேவன், பிரபாகரன் ஆகியோர் நள்ளிரவில் சென்று பார்வையிட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளில் வாய்க்காலில் தண்ணீர் இல்லாமல் போனதால் ஆடி பெருக்கு விழாவை தண்ணீர் இல்லாமலேயே கொண்டாடினர். கொள்ளிடம் கடைமடைப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த வருட ஆடி பெருக்கு விழாவிற்கு முன் கூட்டியே தண்ணீர் வந்து விட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் உற்சாகமாக ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!