கொள்ளையடித்த தங்க டிபன்பாக்சில் சாப்பிட்ட திருடன்

ஐதராபாத்:
தங்க டிபன்பாக்சை கொள்ளையடித்தில் ஒருவர் அதில் சாப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகர் அருங்காட்சியகத்தில் நிஜாம் மன்னர் பயன்படுத்திய பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வைரத்தால் ஆன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு, சில நாட்களுக்கு முன்பு 2 கிலோ எடையுள்ள தங்கத்தால் ஆன டிபன்பாக்ஸ் மற்றும் கப் அன் சாசர் திருடு போனது.

போலீசார் விசாரணை நடத்தி மும்பையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர்
போலீசார் தெரிவித்ததாவது:

கைது செய்யப்பட்டவர்கள், மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். இருவரும், அருங்காட்சியகத்தில் இருந்த பழமை வாய்ந்த தங்கத்திலான குரானை கொள்ளையடிக்கவே திட்டமிட்டனர். சென்டிமென்ட் காரணமாக அதனை கொள்ளையடிக்கவில்லை.

தங்கத்திலான டிபன்பாக்ஸ், துபாய் சந்தையில் 30 அல்லது 40 கோடி ரூபாய் வரை விலை போக வாய்ப்பு உள்ளது. கொள்ளையடித்த நாளில் இருந்து கைதாகும் வரை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தங்க டிபன் பாக்சில்தான் தினமும் உணவை சாப்பிட்டுள்ளார்.

இருவரில் ஒருவர் மீது பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளது. அந்த நபர் தான் இந்த கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!