கோபாலபுரம் வீட்டை அலுவலகமாக மாற்றும் திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை:
கோபாலபுரம் வீட்டிற்கு இடம் மாற உள்ளார் ஸ்டாலின் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கருணாநிதி போலவே சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார். அதற்காக, கருணாநிதி வாழ்ந்த சென்னை, கோபாலபுரம் இல்லத்திற்கு இடம் மாற விரும்புகிறாராம்.

கருணாநிதி மறைந்த பின், கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் வருகை இல்லாததால் பொலிவிழந்து கிடக்கும் அந்த வீட்டை தன் அலுவலகமாக மாற்றுவதன் மூலம் அங்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை கூடுவதோடு, தன் செனடாப் வீட்டுக்கு வருவோரின் எண்ணிக்கையும் குறையும் என இரட்டை கணக்குப் போட்டிருக்கிறார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தை ஸ்டாலின் அலுவலகமாக மாற்றும் முயற்சிகள் வேகமாக நடக்கின்றன. கட்சி அலுவலகம் இருக்கும் அறிவாலயத்துக்கும் ஸ்டாலின் சென்று வருவார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!