கோபி அன்னன் காலமானார்

ஐ.நா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் இன்று காலமானார். இவர் ஐ.நா சபையின் 7வது பொதுச்செயலாளராக சுமார் 10 ஆண்டுகள் பதவி வகித்தவர். 1997 முதல் 2006ம் ஆண்டு வரை பொதுச்செயலாளராக இருந்தார். கானா நாட்டைச் சேர்ந்த இவருக்கு 2001ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோபி அன்னன் இறந்த செய்தி அவரது பவுண்டேஷன் தரப்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!