கோயிலுக்குள் புகுந்து ரூ. 2 கோடி மதிப்பு சிலை திருட்டு

திருவள்ளூர்:
கோயிலுக்குள் புகுந்து ரூ.2 கோடி மதிப்புள்ள மரகதத்தால் செய்யப்பட்ட முருகன் சிலை மற்றும் தங்க வேல் திருடப்பட்டுள்ளது.

சோழவரத்தை அடுத்த அலமாதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் குடும்பத்தினருக்கு சொந்தமான தங்க வேல் முருகன் கோவில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் சிலையின் கால் பகுதிக்கு அருகில் ஒரு அடி உயரமுள்ள மரகத முருகன் சிலையும், அந்த சிலையின் கையில் தங்க வேல் ஒன்றும் இருந்தது. இதைதான் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 2 கோடியாம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!