கோயில் சிலைகளை பாதுகாப்பது அரசு கடமை… நீதிபதிகள் அதிரடி

சென்னை:
கோயில் சிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்று குட்டு வைத்துள்ளனர் நீதிபதிகள். என்ன விஷயம் தெரியுங்களா?

தமிழகத்தில் கோயில் சிலைகள் மாயமானது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கில் பொன். மாணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தன்னிச்சையாகவும், கோர்ட் அனுமதியின்றியும் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், இதனால் விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், கோயில் சிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை. கோர்ட்டிற்கு தெரிவிக்காமல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது.

சிலைகளை பாதுகாக்க அறைகள் அமைக்க உத்தரவிட்டும் இதுவரை அமைக்கப்படவில்லை. இது தொடர்பான அறிக்கையை ஜூலை 11க்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலர் ஆஜராக உத்தரவிடப்படும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!