கோரிக்மைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் பிரமாண்ட பேரணி

புதுடில்லி:
கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பார்லிமென்ட் நோக்கி லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணி நடத்துகின்றனர்.

வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் நவம்பர் 30-ம் தேதி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்லிமென்டை நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவித்திருந்தன.
இதையடுத்து இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

பின்னர் அங்கிருந்து பார்லிமென்ட் நோக்கி பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகள் பேரணி அமைதியாக நடைபெறும் வகையில் புதுடில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!