கோழிக்கோட்டில் அகில பாரத அனுமன் சேனா தமிழக, கேரளா மாநில நிர்வாகிகள் மாநாடு

கேரளா:
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த அகில பாரத அனுமன் சேனா தமிழகம், கேரளா மாநில நிர்வாகிகள் மாநாட்டில் சபரிமலை ஐயப்பனின் புனிதத்தை மீட்டெடுப்பது, கேரள திருக்கோயில்களுக்கு முன்னோர்களால் வழங்கப்பெற்ற பயன்பாடற்ற நிலங்களை இந்துக்களுக்கு பிரித்து வழங்க வலியுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அழகாபுரி ஆடிட்டோரியத்தில் அகில பாரத அனுமன் சேனா தமிழகம் மற்றும் கேரளா மாநில நிர்வாகிகள் மாநாடு நடந்தது. அகில பாரத அனுமன் சேனா கேரள மாநில பொதுச்செயலாளர் சுமேஷ் தலைமை வகித்தார்.

நிறுவன தேசிய தலைவர் எஸ்.வீ. ஸ்ரீதர்ஜி, தேசிய துணைத்தலைவர் ஓம் பரமானந்த பாபாஜி, தமிழ்நாடு மாநில முதன்மை பொதுச்செயலாளர் சிவக்குமார், மாநில அமைப்பாளர் வெள்ளலூர் கோவிந்தராஜ், தமிழக மாநில பொதுச் செயலாளர்கள் தஞ்சை குணசேகரன், திருச்செந்தூர் ரவி கிருஷ்ணன், கேரள ஒருங்கிணைப்பாளர் மனோஜ் மாதவன், கேரள மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கேரள மாநில தலைவர் சந்தோஷ் வரவேற்றார். அகில பாரத இந்து மகா சபா கேரள மாநில தலைவர் கலாதரன், கேரள மாநில செயலாளர் வடகரா விஜயன், இந்து சேனா கேரள மாநில தலைவர் வாசுதேவன், இந்து ஜன முன்னணி கேரள மாநில தலைவர் கோபி மருகரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கோழிக்கோடு செயலாளர் உன்னி நன்றி கூறினார்.

இதில் தமிழ்நாடு கேரள மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர், இளைஞரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சர்ச்சைக்குரிய விவகாரத்தில் முக்கியத்துவம் காட்டும் கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் அரசு வெள்ளத்தால் பாதிப்படைந்த கேரளத்தில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபடாதது ஏன்?, சபரிமலை ஐயப்பனின் புனிதத்தை மீட்டெடுப்பது, கேரள திருக்கோயில்களுக்கு முன்னோர்களால் வழங்கப்பெற்ற பயன்பாடற்ற நிலங்களை இந்துக்களுக்கு பிரித்து வழங்க வலியுறுத்துவது, அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்பது உட்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!