கோவை மருத்துவமனையில் மர்ம பெட்டி… நோயாளிகள் அச்சம்

கோவை:
கோவையில் மர்ம பெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் நோயாளிகளும், மக்களும் அச்சமடைந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் கண் நோய் சிகிச்சைக்கான வார்டு செயல்பட்டு வருகிறது. அதிகளவு நோயாளிகள் வந்து செல்லும் இவ்வார்டில் நேற்று காலை ஒரு மர்ம பெட்டி கிடந்தது; இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததால் அனைவரும் பரபரப்பு அடைந்தனர்.

மருத்துவமனை ஊழியர்கள், வெடிகுண்டு இருக்கும் என்ற சந்தேகத்தில் நோயாளிகளை அவசர கதியில் வெளியேற்றினர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மர்ம பெட்டியை சோதனை செய்தனர். பெட்டியில் துணி மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் கேரளா, கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரோஸ் என்பவருடைய பெட்டி என்றும், நோயாளியான ஆண்ட்ரோஸ் வேறு வார்டில் உள்ள டாக்டரை பார்த்துவிட்டு, மீண்டும் கண் சிகிச்சை வார்டுக்கு வருவதற்குள் இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரும், மருத்துவமனை ஊழியர்களும் நிம்மதியடைந்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!