சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை மக்கள் அச்சம்

ஜகார்த்தா:
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் பயத்தை உருவாக்கியது.

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, அது ரிக்டர் அளவுக்கோலில் 7 ஆக பதிவாகியுள்ளது.
லோம்போக் தீவின் வடக்குப்பகுதியில் 7.0 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை மையம், பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கையால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!