சட்டசபை சிறப்பு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் இல்லை?

சென்னை:
இன்று கூடும் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

சட்டசபை கூட்டம் துவங்கும்போது எம்.எல்.ஏ.,க்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும். இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூடுவதால் மறைந்த கருணாநிதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கருணாநிதி ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ., என்பதாலும், முன்னாள் முதல்வர் என்பதாலும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தால் ஒரு நாள் சபையை ஒத்திவைக்க வேண்டும். எனவே அடுத்த ஆண்டு கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒரு நாள் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!