சட்டசபை தோல்வி எதனால் ஏற்பட்டது… விளக்கம் அளித்த ராஜ்நாத் சிங்

புதுடில்லி:
சட்டசபை தோல்வி எதனால் ஏற்பட்டது… விளக்கம் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

5 மாநில சட்டசபை தேர்தலில், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரசும், தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும், மிசோரமில் எம்என்எப் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. ம.பி.,யில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்பட்டதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த கருத்தை நிராகரித்த ராஜ்நாத், மாநில அரசுகளின் செயல்பாடுகள் அடிப்படையில் தான் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!