சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 40,000-இற்கும் அதிக இலங்கையர்களை மீளத் திரும்பவுள்ளனர்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 40,000-இற்கும் அதிக இலங்கையர்கள் பொதுமன்னிப்புக் காலத்தில் நாட்டிற்கு மீளத் திரும்பவுள்ளனர்.

மூன்று மாதங்கள் பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் இரண்டு மாதங்களுக்குள் குறித்த இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தர எதிர்பார்த்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தினால் பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது.

விசா இன்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்புவது தொடர்பில் அபுதாபியில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் அல்லது துபாயிலுள்ள தூதரக பொது அலுவலகத்திற்கு சென்று தற்காலிக வௌிநாட்டுக் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 1,25,000 வரையிலான இலங்கையர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

Sharing is caring!