சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்ப டிரம்ப் முடிவு

அமெரிக்க நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கு உடனடியாக திருப்பி அனுப்பப் பட முடிவு செய்துள்ளதாக அதிபர் தெரிவித்துளார்.அமெரிக்க நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக சட்ட விரோதமாக குடியேறும் குடும்பத்தினரை தனித்தனியாக பிரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. அதற்கு டிரம்பின் மனைவி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இம்முறை நிறுத்தப்பட்ட்து.

தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டரில் ஒரு பதிவு இட்டுள்ளார். அந்த பதிவில், “அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையைக் கண்டு உலகம் நகைக்கிறது. பல ஆண்டுகளாக இங்கு குடியேற்ற உரிமை பெற மக்கள் காத்துக் கொண்டு உள்ளனர். குடியேற்ற அனுமதி என்பது தகுதி அடிப்படையில் இருந்தாக வேண்டும். நம் நாட்டை முன்னேற்றும் மக்கள் தான் நமக்கு தேவை.

நாட்டுக்குள் வரும் மக்கள் அனைவரையும் நம்மால் அனுமதிக்க முடியாது. அமெரிக்காவில் யாராவது சட்டவிரோதமாக குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டால் வழக்குகள் ஏதுமின்றி உடனடியாக அவர்களை வந்த இடத்துக்கு திர்ப்பி அனுப்பப்பட வேண்டும்.” என குறிபிட்டுள்ளார்.

இந்தியா உட்பட பல நாட்டு தொழில் நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியேற்ற கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். டிரம்பின் இந்த அறிவிப்பல் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டிரம்ப் தற்போது தகுதி உள்ளவர்களுக்கு குடியேற்ற உரிமை அளிக்கப்படும் என்றது தங்களுக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக கூறி உள்ளனர்.

Sharing is caring!