சட்ட விரோதமாக கட்டப்பட்ட நீரவ் மோடி பங்களா இடிப்பு

மும்பை:
மும்பை அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்ட நீரவ் மோடியின் பங்களா இடிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டத்தில், அலிபாக் கடற்கரை உள்ளது. இங்கு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பங்களாக்களை இடிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 58 கட்டட உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதில் ஒரு பங்களா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த பங்களாவை அதிகாரிகள் இடித்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!