சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர் வெளியேற்றம்

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் தேச எல்லைச் சட்டத்தை மீறி நாட்டிற்குள் நுழைந்தவர்கள், சேவை ஒப்பந்தக் காலத்தை நிறைவு செய்த ஊழியர்கள் ஆகியோர் காணப்படுவதாகவும் அவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சவுதி அரேபியாவுக்குள் சட்ட விரோதமாக தங்கியிருக்க ஆதரவு வழங்கிய சவுதி நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring!