சத்தீஸ்கர் முதல்வராக பதவியேற்றார் புபேஷ்…!

ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 68 இடங்களை பிடித்து காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. இதையடுத்து அக்கட்சியை சேர்ந்த புபேஷ் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புபேஷ் பாஹல் பதவியேற்றார். சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக புபேஷ் பாஹல் இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் காங்.மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ராய்பூரில் கனமழை பெய்து வருவதால் முதல்வரின் பதவியேற்பு விழா, அறிவியல் கல்லூரி மைதானத்தில் இருந்து பல்பிர் சிங் ஜூனிஜா உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!