“சபரிமலைக்கு பக்தர்கள் வருகையை அதிகரிக்க விளம்பரங்கள்”

சபரிமலை:
சபரிமலைக்கு பக்தர்கள் வருகையை அதிகரிக்க செய்யும் வகையில் விளம்பரங்கள் செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக நடந்து வரும் போராட்டங்களால், பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இதையடுத்து பக்தர்கள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் திரைப்பட நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரித்து வெளியிட திருவாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது.

போராட்டம் காரணமாக அய்யப்பன் கோவிலுக்கு வர தயங்கும் பக்தர்களின் பயத்தை போக்கும் வகையில் இந்த விளம்பரங்கள் இருக்கும் என தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவு இன்று  எடுக்கப்படும் என, தேவசம் போர்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!