சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடைசெய்ய கூடாது

சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடைசெய்ய கூடாது என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது குறித்து பெண்கள், குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் மலையாள நடிகை பாமா இந்த விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.

தமிழில், எல்லாம் அவன் செயல், சேவற்கொடி ஆகிய படங்களில் நடித்த நடிகை பாமா, சபரிமலை குறித்த தீர்ப்பு பற்றி கூறும்போது, “மத நடைமுறைகளுக்கும் கோவில் நடைமுறைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனக்கென தனித்தனி மதிப்புகளையும், நடைமுறைகளையும் கொண்டுள்ளன.

ஒருவேளை எனக்கு இன்னும் சில காலம் உயிர்வாழும் வாய்ப்பு கிடைத்தால் இப்படிப்பட்ட தீர்ப்புகள் மூலம் அல்லாமல், கோவில் நடைமுறைகளே பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கும் சூழல் வரும் வரை நான் காத்திருப்பேன்.. மற்ற பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவதும் இதுதான்” என கூறியுள்ளார்.

Sharing is caring!