சபரிமலை கோயில் நடை நேற்று இரவு மூடப்பட்டது

சபரிமலை:
சபரிமலை கோயில் நடை நேற்று இரவு மூடப்பட்டது. இந்த பிரச்னை குறித்த சீராய்வு மனுவை விசாரிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று அறிவிப்பு வெளியிடுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 5 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மூடப்பட்டது. சபரிமலைக்கு அனைக்கு வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

நடை திறக்கப்பட்ட 5 நாட்களும் சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல எடுத்த முயற்சியை ஐயப்ப பக்தர்கள் தடுத்தி நிறுத்தினர். இந்நிலையில் சபரிமலை விவகார சீராய்வு மனுக்களை விசாரிப்பது குறித்த அறிவிப்பை, சுப்ரீம் கோர்ட் இன்று (23ம் தேதி) வெளியிடவுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!