சபரிமலை பிரச்னை… இன்று ஆலோசனை கூட்டம்

சபரிமலை:
இன்று ஆலோசனை கூட்டம்… ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எதற்காக தெரியுங்களா?

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்த உச்சநீதிமன்ற உத்தரவை ஆளும் இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

பந்தளத்தில் இருந்து அக்.,10-ல் புறப்பட்ட பக்தர்கள் நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் சபரிமலை மண்டல, மகர விளக்கு கால ஏற்பாடுகள் என்ற பெயரில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பந்தளம் மன்னர் குடும்பம், தந்திரி சமாஜம், ஐயப்பா சேவா சங்கம், யோகஷேச சபை ஆகிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேறு பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு அனுமதி குறித்த பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

சமரச பேச்சில் கலந்து கொள்ள மாட்டோம்’ என அறிவித்திருந்த பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

 

Sharing is caring!