சபரிமலை விவகாரம்… புதுச்சேரியில் பாஜ சார்பில் பந்த்

புதுச்சேரி:
சபரிமலை விவகாரம் தொடர்பாக பந்த்… பந்த்… பாஜ சார்பில் புதுச்சேரியில் இன்று பந்த் நடக்கிறது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து புதுச்சேரியில் பா.ஜ., சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. தொடர்ந்து, அதற்கு காரணமானவர்கள் என கூறி பலரை கேரளா அரசின் கைது செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை கண்டித்து பாஜ., சார்பில் இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த படுகிறது.

முழு அடைப்பு நடைப்பெறுவதை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. அவசர காரணங்கள் தவிர பிறர் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி தலைமைச் செயலாளர் அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளார்.

பா.ஜ., சார்பில் நடத்தப்படும் இந்த முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை. புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!