சபரி மலைக்கு சென்ற 11 பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

பம்பை:
மீண்டும் ஆரம்பித்து விட்டது சர்ச்சை… சபரிமலைக்கு சென்ற 11 பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலைக்கு சென்னையில் இருந்து சென்ற 11 பெண்கள் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தீர்ப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து 50 வயதுக்கு குறைவான 11 பெண்கள் அடங்கிய குழு சபரிமலை வந்தது. அவர்கள் அனைவரையும் பம்பையில் பக்தர்கள் வழிமறித்தனர். தற்போது பெண்கள் அனைவரும் போலீசார் பாதுகாப்பை நாடியுள்ளனர். இதனால் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!