சமாதானமாய் போவது நல்லது….அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும், சமாதானமாய் போனால் நல்லது என அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அந்நாட்டுஎச்சரிக்கை  அதிபர் ஹசன் ரூஹானி பேசுகையில் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசியுள்ளார். அதாவது அவர் கூறுகையில், ”ட்ரம்ப் அவர்களே, சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள். பின், இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டி வரும். ஈரானுடன் சமாதானமாக போங்கள். அது தான் நல்லது.

சமாதானத்தின் தாய் தான் ஈரான். அதே நேரத்தில் ஈரானுடன் போரிட நினைத்தால், ஈரான் போர்களின் தாய் என்பதை உணர வேண்டியது வரும். நாட்டின் பாதுகாப்புக்கும், நலன்களுக்கும் எதிராக ஈரானை நீங்கள் தூண்டி விடும் நிலையில் இல்லை என கடுமையாக எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

காட்டமான ட்ர்மப்….

இதனிடையே அதிபர் ட்ரம்ப், இதற்கு பத்லளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஈரான் அதிபர் ரௌஹானிக்கு, அமெரிக்காவை இன்னொரு முறை மிரட்டி பார்க்க வேண்டாம். இல்லையென்றால், வரலாற்றில் இதற்கு முன்பு நடந்தது போன்ற சம்பவங்களை மீண்டும் அனுபவிக்க நேரிடும். உங்களுடைய வன்முறையான வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கும் பழைய அமெரிக்கா கிடையாது இது. கவனமாக இருக்குங்கள். ” என்று போர் தொடங்கும் பாணியில் மிகவும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.  இதே போல, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும், ஈரான் தலைவர்கள் மாஃபியா கும்பல் போல பேசுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியின்போது 2015ஆம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. இதை ஐ.நா. பாதுகாப்பு ஆணையமும்  ஏற்றுக்கொண்டது.

அப்போது அமலுக்கு வந்த அந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை கை விட வேண்டும். குறிப்பாக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் 15 ஆண்டுகளில் குறைக்க வேண்டும். இதற்கான எந்திரத்தை நிறுவுவதை 10 ஆண்டுகளில் குறைக்க வேண்டும். இதற்கு பதிலாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெற வேண்டும் என்பதாகும்.

ஆனால் கடந்த ஆண்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரானது முதல், இந்த ஒப்பந்தத்தை கடுமையாக சாடினார். பின், அமெரிக்காவுக்கு எதிரான ஒப்பந்தத்திலிருந்து கடந்த மே மாதம் விலகிவிட்டது. அதோடு, ஈரான் மீது பொருளாதார தடைகள் தொடரும் என்றும் அறிவித்தது. இது ஈரானுக்கு நெருக்கடியை தந்து வருகிறது. ஆனால் மற்ற வல்லரசு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாமென அமெரிக்காவை வலியுறுத்தின.

அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகள் ஒப்பந்தத்தை தொடர ஆயத்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!