சமூக ஊடகங்களில் தன்னை கோடீஸ்வரராக காட்டிக்கொண்ட இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..!!

போர்ச்சுக்கீசிய நாட்டு ராப் பாடகர் ஒருவர் சமூக ஊடகங்களில் தன்னை கோடீஸ்வரராக காட்டிக்கொண்டதன் விளைவாக தனது உயிரையே இழந்திருக்கிறார்.

Mota Jr என்னும் David Mota (28), படுக்கை நிறைய பணத்துடன் படுத்திருப்பது, விலையுயர்ந்த கார் வைத்திருப்பது போன்று சமூக ஊடகங்களில் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார்.

அதை நம்பி சிலர் அவரைக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அவரது வீட்டிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மரங்கள் அடந்த பகுதியிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.

அவர் காணாமல் போன அன்று அவரும் ஒரு பெண்ணும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல, அங்கு துப்பாக்கியுடன் இருந்த இருவர் அந்த பெண்ணை துரத்தியடித்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

David Motaவை சிலர் கடத்திக்கொண்டு சென்று பணம் நகையை எல்லாம் எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்டு சித்திரவதை செய்ததாக நம்பப்படுகிறது.

அவரது வீட்டுக்கு வந்து சோதனையிட்டபோது பணமோ நகையோ கிடைக்காததால் David Motaவை அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

Sharing is caring!