சம்பளத்தில் பிடித்தம் செய்வதில் சிக்கல்… கஜா புயல் நிவாரணத்தில் சிக்கல்

சிவகங்கை:
சிக்கல்…சிக்கல்… கஜா புயல் நிவாரணத்தில் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

பெரும்பாலான அரசு ஊழியர், ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிக்காததால், கஜா புயல் நிவாரணத்திற்கு ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஜா புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாக தருவதாக அறிவித்தன.

இதையடுத்து விரும்பிய ஊழியர்களிடம் டிசம்பரில் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட்டது. ஆனால், பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிக்காததால் ஊதியத்தை பிடித்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வட்டாரத்திற்கு 30 க்கும் குறைவானவர்களே பணம் பிடித்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனால் பிடித்தம் செய்யாமலே, சம்பள பட்டியலை கருவூலத்திற்கு அனுப்பினோம்’ என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!