சம்பள பாக்கி பிரச்னை… இந்தியாவை சேர்ந்த 7 பேர் பிணை கைதிகளாக பிடிப்பு

புதுடில்லி:
சம்பள பாக்கி பிரச்னையில் இந்தியாவை சேர்ந்த 7 பேர் பிணை கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

சம்பள பாக்கி காரணமாக எத்தியோப்பியாவில், ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியாவை சேர்ந்த 7 பேரை, உள்ளூர் தொழிலாளர்கள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.

அடிப்படை கட்டமைப்பு, நிதிச் சேவைகள் உட்பட பல்வேறு துறைகளில் , மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஈடுபட்டு வரும், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதனால் அந்த நிறுவனத்தை மத்திய அரசு கையகப்படுத்தி, பழைய நிர்வாக குழுவை கலைத்து விட்டு, புது குழுவை நியமித்துள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல பணிகளை செய்து வருகிறது.

எத்தியோப்பியாவிலும் உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து அந்த நிறுவனம் பல்வேறு சாலை பணிகளை செய்து வருகிறது. இதற்காக பொறியாளர்கள் மற்றும் நிர்வாக பணிகளில் பல இந்தியர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் ஒரோமியா, அம்ஹாரா மாநிலங்களில், ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவன இந்தியாவை சேர்ந்த 7 ஊழியர்களை, கடந்த 25ம் தேதி முதல் சிறைபிடித்து வைத்துள்ளனர்.

இதனால் அவர்கள் உடனடியாக நிதி அனுப்பி தங்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பிரச்னையை கவனித்து வருகிறோம். தீர்வு காண ஐஎல் அண்ட் எப்எஸ் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றனர். வெளியுறவு அமைச்சகமும் விசாரணை நடத்தி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!