சரண்டர்… சரண்டர்… போலீசில் சரண்டர் ஆன நக்சல் கமாண்டர்

ராய்ப்பூர்:
வேண்டாம்… வேண்டாம்… என்று தானாகவே வந்து சரண்டர் ஆகி உள்ளார் நக்சல் கமாண்டர்.

சட்டீஸ்கரில் தலைக்கு ரூ. 5 லட்சம் வெகுமதியாக அறிவிக்கப்பட்ட நக்சல் கமாண்டர், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் போலீசில் சரணடைந்தார்.

சட்டீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் உள்ள சுக்மா மாவட்டத்தில் நக்சல் கமாண்டராக இருந்தவன் ரவி, இவரது மனைவி புத்ரி. சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நக்சல் எதிர்ப்புபடை போலீசாரிடம் குடும்பத்துடன் சரணடைந்தார்.

ரவி மீது கடந்த 2013ம் ஆண்டு சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ்பால் மேனனை கடத்தியது, வெடிகுண்டு வீசி தாக்கியது போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவனது தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் இவர் தன் குடும்பத்துடன் சரணடைந்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!