சரியாகி வருகிறது… ஓசோன் படலம் சரியாகி வருகிறது… ஐக்கிய நாடுகள் தகவல்

ஐக்கிய நாடுகள்:
சரியாகி வருகிறது… சரியாகி வருகிறது… என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்து உள்ளது. சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து, பூமியில் வாழும் உயிரினங்களை ஓசோன் படலம் பாதுகாக்கிறது.

அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணங்களால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உலகம் வெப்பமயமாதல், அதிகரித்தது. ஓசோனில் ஏற்பட்ட பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கை எடுத்து வந்தன.

இந்நிலையில், மரம் வளர்ப்பு மற்றும் பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. 2030க்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்துவிடும் என ஐக்கிய நாடுகள் கூறி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!