சரிவு… சரிவு… இந்திய ரூபாய் மதிப்பு செம சரிவு

மும்பை:
சரிவு… சரிவு… இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 70.47 ஆக சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததாலும், எண்ணெய் விலைகளின் ஏற்றம் காரணமாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் 70.10 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது 70.20 ஆக சரிந்தது. காலை 11.15 மணியளவில் மேலும் சரிந்து 70.47 என்ற நிலையை அடைந்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!