சர்ச்சையை கிளப்பியது துணை முதல்வரின் செயல் பேன்டில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட அதிகாரியா?

பெங்களூரு:
தன் கால் பகுதியில் ஒட்டியிருந்த மண் மற்றும் தூசியை பாதுகாப்பு அதிகாரியை விட்டு துடைக்க விட்ட துணை முதல்வரின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

கர்நாடக துணை முதல்வராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் பரமேஸ்வரா. இவர் மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட சென்றார்.

தெருக்களில் 2வது நாளாக நடந்து சென்று குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்புக்களை நேரில் ஆய்வு செய்து, அவற்றை சரி செய்யும் பணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குப்பை மற்றும் சேறு நிறைந்த தெருக்களில் நடந்து சென்றதால் அவரது காலில் தூசி ஒட்டியது. இதனால் ஆய்வுக்கு நடுவே தன்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரியை அழைத்து தனது கால் பகுதியில் பேன்ட்டில் ஒட்டி இருந்த மண் மற்றும் தூசியை துடைக்கும் படி கூறினார்.

பாதுகாப்பு அதிகாரி ஒரு காலை துடைத்ததும், மறு காலையும் காட்டி, துடைக்கும்படி கூறினார். இதை பரமேஸ்வராவுடன் வந்த பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்தனர். பரமேஸ்வரா ஆய்வு செய்து விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே பாதுகாப்பு அதிகாரி, அவர் காலில் உள்ள தூசியை துடைத்த போட்டோக்களும், வீடியோவும் சமூக தலைதளங்களில் வெகு வேகமாக பரவியது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!