சர்ச்சை பேராசிரியர் நிர்மலா ஜாமீன் மனு இன்று விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூர்:
சர்ச்சை பேராசிரியர் நிர்மலாவின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.

கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, ஆறாம் முறையாக ஜாமீன் கோரி, ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார்.

ஏற்கனவே ஐந்து முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யபட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை அவரது வக்கீல் மகாலிங்கம் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனுவை இன்று (27ம் தேதி) காலை நீதிபதி முத்துசாரதா விசாரிக்கிறார். இன்று பேராசிரியை நிர்மலாவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று தெரிந்து விடும்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!