சர்ச்சை பேராசிரியை நிர்மலாவுக்கு இன்று குரல் பரிசோதனை

சென்னை:
சர்ச்சை பேராசிரியை நிர்மலா வழக்கில் இன்று சென்னையில் குரல் பரிசோதனை நடக்க உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு இன்று சென்னையில் குரல் பரிசோதனை நடக்கவுள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் கவர்னருக்கு தொடர்பு உள்ளது என்று பலரும் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில் கவர்னர் இதுகுறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை அமைத்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவின் உண்மை நிலை குறித்து கண்டறிய அவருக்கு குரல் பரிசோதனை நடத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து அவர் மதுரை நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு வந்தார். இன்று அவருக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் குரல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை நடக்கவுள்ளது. பின்னர் அவர் வரும் 29ம் தேதி மதுரை சிறைக்கு திரும்பவுள்ளார் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!