சர்ஜிக்கல் படை… முப்படை வீரர்களை கொண்டு உருவாக்க திட்டம்

புதுடில்லி:
முப்படைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்களை கொண்டு சர்ஜிக்கல் படையை உருவாக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை கடந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.

இந்நிலையில் முப்படைகளிலிருந்தும் தேர்வுசெய்யப்பட்ட வீரர்களைக் கொண்ட சர்ஜிக்கல் படையை உருவாக்க வேண்டும் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இதுகுறித்து விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் எதிரிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி விட்டு திரும்பும் வகையில் இந்தப் படை உருவாக்கப்படும். சரியான நேரத்தில் திட்டமிடுதல் மற்றும் தாக்குதல் நடத்துதல் என இரு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

திட்டமிடுதல் பிரிவில் 96 வீரர்களூம் தாக்குதல் பிரிவில் 124 வீரர்களும் இருப்பார்கள். இந்த படையை உருவாக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!