சவால்… சவால் விட ஆசையாக இருக்கு… நிடி ஆயோக் துணைத் தலைவர் சொல்றார்

புதுடில்லி:
சவால்… சவால்… விட ஆசை என்று நிடி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

கடந்த காலங்களில், இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட பொருளாதாரத்திற்காக உழைத்த காலம் குறித்து காட்ட முடியுமா என பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு சவால் விட ஆசையாக உள்ளது என்று நிடி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அமர்த்தியா சென் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து என்ன சூழ்நிலை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரம் குறித்து அவர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு கடந்த 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போதைய அரசு செய்த பணிகள் போல், வேறு எந்த 4 ஆண்டுகளிலாவது இந்தியாவை தூய்மையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் மீது அக்கறை கொண்ட பொருளாதாரத்திற்காக பணி செய்யப்பட்டது உண்டா என அவருக்கு சவால் விடுக்க விரும்புகிறேன்.

அரசின் நலத்திட்ட பலன்கள், நாட்டின் கடைசி நபருக்கும் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவருக்கு புரியவில்லை என்றால், அவர் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், அமர்த்தியா சென், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாகவும், பொருளாதாரம் பின்னோக்கி செல்வதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!