சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் இணை விமானிகள்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ஃப்ளைனஸ் என்னும் விமான நிறுவனம் இந்த புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதி அரேபியாவில், பெண்களுக்கு காட் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்கி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சவுதி பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் அந்நாட்டு அரசால் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் முறையாக ஃப்ளைனஸ் என்னும் விமான நிறுவனம் முதல் முறையாக பெண்களை இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் “ நாட்டின் மாற்றத்தில் முக்கிய்ப் பங்கு வகிக்கும் சவுதி பெண்களுக்கு அதிகாரமளிக்க ஃப்ளைனஸ் நிறுவனம் விரும்புகிறது.

இணை விமானிகள் மற்றும் பணிப்பெண்களின் வேலைக்காக இதுவரை 1000 சவுதி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் பொருத்தமானவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். சவுதியில் வேலை பார்க்க பெண்களுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும் அத்தகைய வேலைகளில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்களே அதிகம் ஈடுபட்டு வந்தனர். இனி இந்நிலை மெல்ல மெல்ல மாறும் “ என்று கூறப்பட்டது.

சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து விமானம் இயக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சவுதி அரசின் இந்த நடவடிக்கை பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

Sharing is caring!