சவுதி அரேபிய தாக்குதலின் பின்னணியில் ஈரான்

சவுதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கு ஆதாரமான செய்மதிப் படங்களையும் புலனாய்வுத் தகவல்களையும் அமெரிக்கா வௌியிட்டுள்ளது.

குறித்த தாக்குதலுடன் ஈரானுக்குத் தொடர்பிருப்பதாக குற்றஞ்சுமத்திய அமெரிக்கா, அதன் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த ஆதாரங்களை வௌியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலுக்கும் தமது நாட்டிற்கும் தொடர்பில்லை என ஈரான் தெரிவித்திருந்தது.

இருப்பினும், தாக்குதலுக்கான வழிப்படுத்தல்கள் மற்றும் தாக்குதல்களின் விரிவுபடுத்தப்பட்ட தன்மை ஆகியன இந்தத் தாக்குதலுடன் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகம் கொள்ளவைப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் 5 வீதம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மசகு எண்ணெயின் விலை 15 முதல் 19 வீதம் வரை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!