சவுதி அரேபிய மன்னர் – பிரிட்டன் பிரதமரின் தூதுவர் சந்திப்பு
சவுதி அரேபிய மன்னர் மொஹமட் பின் சல்மான் மற்றும் பிரித்தானிய பிரதமரின் விசேட தூதுவர் சிமொன் மெக் டொனால்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானிய வௌிவிவகார அமைச்சர் ஜெரேமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது, யேமனில் இடம்பெறும் உள்நாட்டு மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஜெரேமி ஹண்ட் அறிவித்துள்ளார்.
அத்துடன், சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S