சாராயம் விற்ற காசில் ஆசிரியர்களுக்கு சம்பளம்…..அமைச்சர் கே.சி.வீரமணி

டாஸ்மாக் வருமானத்தில்தான் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாகவும் அதனால் குடி மக்களை குடிக்க வேண்டாம் என்று சொல்ல முடியுமா என வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியிருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூரில் நடந்த பள்ளித் திறப்பு விழாவில் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார். அங்கு குடித்துவிட்டு வந்திருந்த முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் பேசி அப்புறப்படுத்தினர்.

பின்பு பேசிய அமைச்சர் வீரமணி “ டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் இந்த பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும்” என்று பேசினார்.

இதனால் அமைச்சர் கே.சி.வீரமணி பேசிய அந்தக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Sharing is caring!