சாலையை விட விவசாயமே முக்கியம்… கமல் சொல்றார்

சென்னை:
விவசாயம்தான் முக்கியம்… விவசாயம்தான் முக்கியம் என்று கமல் தெரிவித்துள்ளார்.

சாலைகளை விட விவசாயம் தான் முக்கியம் என மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கூறி உள்ளார். சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற ஸ்டேட்கான் -2018 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:

சாலைகளை விட விவசாயம் தான் முக்கியம். விவசாயம் இருந்தால் தான் சாப்பிடமுடியும். தங்கத்தையும் வைரத்தையும் சாப்பிட முடியாது. மலைகள், கிராமங்களை அழித்துதான் சாலை தேவையா. டிபன்ஸ் காரிடருக்காக சாலை தேவை என்கிறார்கள்.

அதை விட வேலைவாய்ப்பு முக்கியம் நேர்மையான அரசு இருந்திருந்தால் பதற்றம் வந்திருக்காது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தான் கட்டட தொழிலுக்கு சரிவு என காரணம் கூறுகிறார்கள்.

கட்டணம் செலுத்தியவர்களுக்கு அனுமதி வழங்கியதால் இந்நிலை ஏற்பட்டது. மக்களின் கனவுகளை கான்கிரீட்டில் கட்டிகொடுப்பவர்கள் தான் பொறியாளர்கள், ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர். பினராயி விஜயனை அடிக்கடி சந்திப்பதால் என்மீது கம்யூனிஸ்ட் சாயம் பூசப்படுகிறது. தேர்தலுக்கு மக்கள்நீதி மையம் தயாராகிறது. மக்களுக்கான வாக்குறுதிகளை சிறப்பாக செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!