சாலை மறியல் செய்த திமுக எம்எல்ஏ உட்பட 200 பேர் கைது

புதுக்கோட்டை:
மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்த சம்பவத்தால் திமுக எம்எல்ஏ உட்பட 200 பேர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.

புதுக்கோட்டை அருகே மறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக தி.மு.க., எம்.எல்.ஏ.,உட்பட 200 பேர் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தாசில்தார் அளித்த புகாரின் பேரில் போலீசார் போராட்டத்தில் எம்.எல்.ஏ உட்பட 200 பேரை கைது செய்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!