சிக்காகோ நகரில் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்

சிக்காகோ நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிதாரி, வைத்தியர் ஒருவர், மருத்துவ உதவியாளர், பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

பரஸ்பரத் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுள்ளதாகவும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளாரா என்பது தௌிவாகத் தெரியவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபருடன் தொடர்பில் இருக்கும் பெண் ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறும் அதிகாரிகள், ஆனால், அதுவே காரணமாக இருக்காது சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!